/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோயிலை உள்நோக்கத்தோடு இடிக்க முயற்சி: ஹிந்து முன்னணி புகார்
/
கோயிலை உள்நோக்கத்தோடு இடிக்க முயற்சி: ஹிந்து முன்னணி புகார்
கோயிலை உள்நோக்கத்தோடு இடிக்க முயற்சி: ஹிந்து முன்னணி புகார்
கோயிலை உள்நோக்கத்தோடு இடிக்க முயற்சி: ஹிந்து முன்னணி புகார்
ADDED : ஆக 28, 2024 05:15 AM
திண்டுக்கல், : ''திண்டுக்கல் பர்மா காலனி அருகே உள்ள ஸ்ரீநாகர் காளியம்மன் கோயிலை உள்நோக்கத்தோடு இடிக்க எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென'' ஹிந்து முன்னணியினர் கலெக்டரிடம் புகாரளித்தனர்.
ஹிந்து முன்னணி மாவட்ட செயலர் ராம்குமார் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் நத்தம் ரோடு பகுதியில் உள்ள ஸ்ரீநாகர் காளியம்மன் கோயிலை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடிப்பதற்கு திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சார்பில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. கலெக்டரின் அறிவுறுத்தலின் படி இடிக்க உள்ளதாக தெரிவிக்கிறார்.
கிழக்கு தாலுகா அதிகார வரம்பிற்கு உட்பட்ட காஸ்மோபாலிட்டன் கிளப் எதிர்புறம் சிறுமலை பிரிவில் இரெண்டெல்லைப்பாறை அருகே ரோட்டின் மீது என அரசு நிலத்தில் பிற மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் உள்ளன.
நத்தம் ரோடு,முத்துச்சாமி ஆசாரி குளத்தின் ஒரு பகுதியையே சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகம் உள்நோக்கத்தோடு பர்மா காலனியில் உள்ள ஸ்ரீநாகர் காளியம்மன் கோவிலை இடிப்பதற்கு மும்முரம் காட்டுகிறது. இது ஹிந்து மக்களிடையே பெரும் மன உளைச்சல், வேதனையை உருவாக்குகிறது.
மதக்கலவரத்தை துாண்டுவதற்கு சில சமூக விரோதிகள் மறைமுகமாக செயல்படுகின்றன. எனவே கோயில் இடிப்பு நடவடிக்கையை நிறுத்த வேண்டுமென கேட்டுள்ளனர்.

