ADDED : ஜூலை 12, 2024 07:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஜி.டி.என்., கலைக்கல்லுாரியில் கணினிப்பயன்பாட்டுத்துறை சார்பாக செயற்கை நுண்ணறிவு பயன்பாடா அச்சுறுத்தலா என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.
மாணவி சுஜிதா வரவேற்றார். முதல்வர் சரணவன் தலைமை வகித்தார். கல்வி இயக்குநர் மார்கண்டேயன் , சுயஉதவிப் பிரிவின் துணை முதல்வர் நடராஜன் பேசினர். துறையின் ஆர்க்யூஸ் கிளப் பேரவை உறுப்பினர்கள் பதவியேற்றனர். பேராசிரியர் ஜெயசித்ரா சிறப்பு பேச்சாளரை அறிமுகம் செய்து வைத்தார். ெஹச்.சி.எல்., தொழில்நுட்ப மேலாளர் பாலாஜி கேசவன் விளக்கம் அளித்தார். துறைத்தலைவர் ஆர்த்தி நன்றி கூறினார்.