/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நடுரோட்டில் உள்ள பெயர் பலகையால் இடையூறு
/
நடுரோட்டில் உள்ள பெயர் பலகையால் இடையூறு
ADDED : ஜூலை 31, 2024 05:44 AM

வாகனங்களால் இடையூறு
தாண்டிக்குடி போலீஸ் ஸ்டேஷன் நுழைவு வாயில் முன் வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் ஆண்டு கணக்கில் ரோட்டோரம் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டுள்ளது. இவ்வாகனங்களை மாற்றம் செய்ய வேண்டும். எஸ். முருகன், தாண்டிக்குடி.
.........--------
ரோட்டோர கிணறால் ஆபத்து
குஜிலியம்பாறை ஆர்.புதுக்கோட்டை ஊராட்சி கொண்டமநாயக்கன்பட்டி அரசு பள்ளி அருகே உள்ள வளைவில் ரோட்டோரம் ஆபத்தான கிணறு உள்ளது .இதனால் விபத்து ஏற்படும் அபாயும் உள்ளது .தடுப்பு சுவரை உயர்த்தி கட்ட வேண்டும்.பழனிச்சாமி குஜிலியம்பாறை.
.................-------மின்கம்பத்தில் செடிகள்
கொடைரோடு பஸ் ஸ்டாண்ட் பொதுக்கழிப்பறை செல்லும் மின்கம்பத்தில் செடிகள் படர்ந்து மின் கசிவு ஏற்படுகிறது .இதனால் அருகில் செல்ல அச்சப்படுகின்றனர் .விபத்து ஏற்படும் முன் புதர்மண்டி உள்ள செடிகளை அகற்ற வேண்டும் க.ரதிஷ்பாண்டியன் , பொம்மணம்பட்டி.
.........------
உடைந்த படிக்கட்டுகள்
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மதுரை, தேனி, பஸ் நிறுத்தம் எதிரே உள்ள பாதையில் படி சேதம் அடைத்து சிமென்ட் பூச்சு உடைந்து கம்பி வெளியே தெரிகிறது. பயணிகள் சிரமப்படுவதால் படிக்கட்டைகளை சரி செய்ய வேண்டும்.ராஜேஷ் குமார் திண்டுக்கல்.
............------நடுரோட்டில் பெயர் பலகை
திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு எம்.எம்.கல்லுாரி அருகே ஆர். எம்.காலனி ரோட்டில் பெயர் பலகை நடுரோட்டில் வைத்துள்ளதால் இடையூறு ஏற்படுகிறது .போக்குவரத்துக்கு சிரமம் உள்ளதால் பலகையை ஓரமாக வைக்க வேண்டும்.சின்னத்தம்பி திண்டுக்கல்.
..........------சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு
திண்டுக்கல் மேட்டுப்பட்டி ரோடு சாக்கடையில் பிளாஸ்டிக் கழிவு அடைத்துள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளதால் சாக்கடையை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.செல்வம்,திண்டுக்கல்.
.......-------சர்வீஸ் ரோட்டில் குப்பை
திண்டுக்கல்- மதுரை நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குப்பை குவித்து வைத்துள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பல்வேறு பகுதியில் இருந்து குப்பையை கொட்டி அகற்றப்படாமல் உள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. கவுசல்யா, திண்டுக்கல்.
.............