/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜெ., பிறந்த தினவிழா கொண்டாட்டம்
/
ஜெ., பிறந்த தினவிழா கொண்டாட்டம்
ADDED : பிப் 25, 2025 05:57 AM

திண்டுக்கல், பிப்.25-
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுதிண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள எம்.ஜி.ஆர்., உருவச்சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ் மோகன் தலைமையில்  மரியாதை செலுத்தப்பட்டது.
பகுதி செயலாளர்கள்மோகன், சேசு, சுப்பிரமணி, முரளி, முன்னாள் மாநில பொதுக்குழுஉறுப்பினர் நெப்போலியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன், தலைவர் பழனிச்சாமி,மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன், முன்னாள் ஆவின் தலைவர் திவான்பாட்ஷாமண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத்தலைவர் வீர மார்பன்  கலந்துகொண்டனர்.
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில்  தருமத்துப்பட்டியில்  ஜெ., பிறந்த தின விழா நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமை வகித்தார்.
செவனக்கரையான்பட்டி, மாங்கரை, கன்னிவாடி, டி.புதுப்பட்டி, சந்தமநாயக்கன்பட்டி, மூலச்சத்திரம் உள்ளிட்ட இடங்களில்  இனிப்பு, நல உதவிகள் வழங்கப்பட்டன.
ஊராட்சித் தலைவர் மருதமுத்து, கூட்டுறவு சங்க தலைவர் தண்டபாணி,  எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட தலைவர் மகேந்திரன் பங்கேற்றனர்.
தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை , கீழதிப்பம்பட்டி வானவில் பார்வையற்றோர் மன்றத்தில் அன்னதானமும் நடந்தது.
ஆத்துார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில்  சின்னாளபட்டியில்   ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் சக்கரபாணி முன்னிலை வகித்தார். கட்சி கொடி ஏற்றப்பட்டு, இனிப்பு, நல உதவிகள் வழங்கினர்.
மாவட்ட துணைச் செயலாளர் விஜய பாலமுருகன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி, பொருளாளர் பாலாஜி,   எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அருளானந்தம், மகளிரணி   ஆனிசோபிமிடில்டா,   ஊராட்சி தலைவர் பேட்ரிக் பிரேம்குமார்,  முன்னாள்  கவுன்சிலர் அருள் வெண்ணிலா பங்கேற்றனர்.
சித்தையன்கோட்டையில் மாவட்ட மாணவரணி சார்பில்  பிறந்த நாள் விழா நடந்தது.
மாவட்ட செயலாளர் கோபி தலைமை வகித்தார்.
பேரூர் செயலாளர் முகமது அலி, ஒன்றிய மாணவரணி செயலாளர் முகமது ஹாஜியார், நிர்வாகிகள் அக்பர் அலி, பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் ரமேஷ்குமார், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகி முத்து, சசிகுமார், ஜெ., பேரவை நிர்வாகி பாக்கியம் பங்கேற்றனர்.
வேடசந்துார்:    முன்னாள் முதல்வர் ஜெ .,  பிறந்தநாள் விழாவை   ஆத்து மேட்டில் அ.தி.மு.க., நகர செயலாளர் பாபுசேட் தலைமையில்   இனிப்பு   வழங்கி கொண்டாடினர்.
மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான்போஸ், நிர்வாகிகள் தண்டபாணி, ஆறுமுகம், சந்திரசேகர், ராமலிங்கம், நடராஜன், ராஜலிங்கம், மல்லீஸ்வரன், அம்மையப்பன், செல்வகுமார், வில்லியம், வேல்முருகன்  பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம்:   பஸ் ஸ்டாண்ட் முன்பு  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி  மரியாதை செய்யப்பட்டு  இனிப்பு   வழங்கப்பட்டது.
அ.தி.மு.க.,நகர செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார்.    ஒன்றிய செயலாளர்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட பொருளாளர் பழனிவேல்,  மீனவர் அணி  கே.பி. வி. மனோகரன்,   ஒன்றிய செயலாளர்கள் அப்பன் கருப்புசாமி, முருகேசன்,  பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, பேரூர் செயலாளர் குப்புசாமி,   வழக்கறிஞர் பிரிவு   சுப்பிரமணி,  மாணவர் அணி முத்துவேல்,  இளைஞரணி  தவமணி,  தகவல்   பிரிவு   சீரா பாலா,  அம்மா பேரவை   பொன்னுசாமி,  பாசறை செயலாளர் தமிழ்வாணன்,    இளைஞரணி  வீரமணிகண்டன், பாசறை  தமிழ்வாணன், மீனவரணி  மோகன்ராஜ் கலந்து கொண்டனர்.
*கோபால்பட்டியில் அ.தி.மு.க.,   ஜெ.  பேரவை இணை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை வகித்தார்.    ஒன்றிய செயலாளர்கள் ராமராஜ், சுப்பிரமணி,   மேட்டுக்கடை செல்வராஜ்,  ஜெ.பேரவை  சுப்ரமணி,   இளைஞர் அணி   இளம்வழுதி   முன்னிலை வகித்தனர்.
ஜெ.பேரவை செயலாளர் எம்.ராஜேந்திரன், இணைச் செயலாளர்கள் விஜயன், குணசேகரன், வர்த்தக அணி   ஹரிகரன், ஒன்றிய பொருளாளர் ரமேஷ் பாபு,  எம்.ஜி.ஆர்., மன்றம்  சக்திவேல், செல்வம்,  சிறுபான்மை பிரிவு  ஏ.ஜி.டி.அந்தோணி   கலந்து கொண்டனர்.

