/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜூனியர்ஸ் கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி
/
ஜூனியர்ஸ் கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி
ஜூனியர்ஸ் கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி
ஜூனியர்ஸ் கிரிக்கெட் லீக்: விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி
ADDED : மார் 10, 2025 05:26 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சின்னாளபட்டி சண்முகம் ஹாஸ்பிடல் இணைந்து நடத்தும் 16 வயதிற்குட்பட்டோருக்கான ஸ்ரீமதி கோப்பை ஜூனியர்ஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்று ஸ்ரீமதி கோப்பையை வென்றது. போட்டிகள் பி.எஸ்.என்.ஏ., ஆர்.வி.எஸ்., மற்றம் ரிச்மேன் மைதானங்களில் நடந்தது.
முதல் அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா அணி 49.2 ஓவர்களில் 297 ஆல்அவுட் ஆனது.
ஹேமந்த் 67, ஹரிபிரசாந்த் 36, மணியரசன், திவாகர் தலா 4 விக்கெட். சேசிங் வேடசந்துார் ஜாஹீர் கிரிக்கெட் அகாடமி அணி 25.2 ஓவர்களில் 98க்கு ஆல்அவுட் ஆகி தோற்றது. சச்சின் 4, மதுபிரசாத் 3 விக்கெட். 2வது அரையிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் ஆரஞ்ச் அகாடமி 38.3 ஓவர்களில் 125க்கு ஆல்அவுட் ஆனது.
சசிகுமார் 30, யாகவன்விஜய் 3 விக்கெட். சேசிங் செய்த திண்டுக்கல் விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் 27 ஓவர்களில் 126/3 எடுத்து வென்றது. சஞ்சய்பாலாஜி 25. இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா 37.5 ஓவர்களில் 137 க்கு ஆல்அவுட் ஆனது.
தர்ஷ்வின் 52, யாகவன், கன்வால்கிேஷார் தலா 3 விக்கெட். சேசிங் செய்த விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 46.5 ஓவர்களில் 138/5 எடுத்து வென்றது. அஸ்வாக் 26, கோபிநாத் 26(நாட்அவுட்).
விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணி வெற்றி பெற்று ஸ்ரீமதி கோப்பையை வென்றது.
சிறந்த பேட்ஸ்மனாக விக்னேஷ் ஸ்போர்ட்ஸ் அணியின் சஞ்சய்பாலாஜியும், பவுலாராக பிரஸித்தி அணியின் மதுபிரசாத்தும், ஆரஞ்ச் அகாடமியின் பிராஜன், ப்ராமிஸிங் யங்க்ஸ்டர் வீரராக பிரஸித்தியின் கீர்த்திவாசனும், ப்ளேயர் ஆப் த டோர்னமெண்டாக விக்னேஷ் ஸ்போர்ட்ஸின் ஸ்ரீஹரியும், இறுதிப்போட்டியின் சிறந்த வீரராக பிரிஸித்தியின் தர்ஷ்வினும் தேர்வாகினர்.
போட்டிகளுக்குப் பின் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க முன்னாள் உதவிசெயலாளர் வெங்கட்டராமன் கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.
மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச்செயலர் ராஜ்மோகன் மற்றும் செயற்குழு உறுப்பினர் எவரெஸ்ட் பங்கேற்றனர்.