ADDED : மார் 03, 2025 05:02 AM

செந்துறை : நத்தம் செந்துறையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க., சார்பில் ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது.
50-க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றது.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசை திருவாரூர்-தட்டக்குடி அணியும், 2-ம் பரிசை செந்துறை அணியும், 3-ம் பரிசை தின்டுக்கல் மேட்டுப்பட்டி அணியும், 4-ம் பரிசை மணப்பாறை- சரளைப்பட்டி அணியும், பெண்கள் பிரிவில் முதல் பரிசை அரியலுார்- சிலால் அணியும், 2-ம் பரிசை கோவை அணியும், 3-ம் பரிசை நாமக்கல் அணியும், 4-ம் பரிசை பழநி அணியும் வென்றன.
பரிசளிப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கினார்.
ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் சின்னாக் கவுண்டர், தொழிலதிபர் அமர்நாத் பங்கேற்றனர்.