/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கன்னியாபுரம் காளியம்மன் கோயில் விழா
/
கன்னியாபுரம் காளியம்மன் கோயில் விழா
ADDED : மே 29, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி, : -சாணார்பட்டி அருகே கன்னியாபுரம் காளியம்மன், மாரியம்மன், பகவதி அம்மன் கோயில் விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இக்கோயில் விழா மே 21ல் சுவாமி சாட்டுதல், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு அலங்காரம், அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை சந்தனவர்த்தினி ஆற்றங்கரையில் சிறப்பு பூஜை செய்ய கிராமப் பெண்கள் மேளதாளம் முழங்க பொங்கல் பானை எடுத்து வந்து பொங்கல் வைத்தனர். முக்கிய நிகழ்ச்சியாக இன்று தீச்சட்டி, மாவிளக்கு, அலகு குத்துதல், பொங்கல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவர்.