/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கெச்சானிபட்டி கோயில் கும்பாபிஷேகம்
/
கெச்சானிபட்டி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 07, 2024 07:03 AM

வடமதுரை: வடமதுரை தென்னம்பட்டி அருகே கெச்சானிபட்டி ஸ்ரீ வரசித்தி விநாயகர், பழனியாண்டவர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
நேற்றுமுன்தினம் மாலை புனித தீர்த்தம், முளைப்பாரியுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. ஈசநத்தம் மங்களாம்பிகை ஈசனாதி ஈஸ்வரன் கோயில் அர்ச்சகர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தனர். எம்.எல்.ஏ., காந்திராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பழனிச்சாமி, பரமசிவம், ஊராட்சி தலைவர் கோமதி, ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகர், ஒக்கலிகர் சங்க செயலாளர் நடராஜன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர் கணேசன், நிர்வாகிகள் இளங்கோ, சசிக்குமார், காங்., வட்டார தலைவர் ராஜரத்தினம், பங்கேற்றனர்.