ADDED : ஜூலை 13, 2024 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி, : பழநி முருகன் கோயிலின் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி மாதம் லட்சார்ச்சனை நடைபெறும்.
ஜூலை 17 ஆடி முதல் நாளில் பெரியநாயகியம்மன் கோயிலில் லட்சார்ச்சனை துவங்க உள்ளது. ஆக., 10 வரை நடக்கும் இதில் ஜூலை 19 ல்பெரிய நாயகி அம்மனுக்கு முத்தங்கி அலங்காரம், ஜூலை 26 ல் மீனாட்சி அலங்காரம், ஆக., 2ல் சந்தன காப்பு அலங்காரம், ஆக., 16 ல் தங்க கவச அலங்காரம்,வெள்ளித்தேரில் சுவாமி புறப்பாடு நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.