/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பள்ளி மாணவர்கள் மூலம் சுற்றுச்சூழலை காக்கும்'லயன்ஸ்'
/
பள்ளி மாணவர்கள் மூலம் சுற்றுச்சூழலை காக்கும்'லயன்ஸ்'
பள்ளி மாணவர்கள் மூலம் சுற்றுச்சூழலை காக்கும்'லயன்ஸ்'
பள்ளி மாணவர்கள் மூலம் சுற்றுச்சூழலை காக்கும்'லயன்ஸ்'
ADDED : செப் 09, 2024 05:04 AM

நத்தம் லயன்ஸ் கிளப் தனியார் பள்ளியோடு இணைந்து பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அதை நடவு செய்ய வைத்து அதன்மூலம் சுற்றுச்சூழலை பராமரிக்கின்றனர்.
கரந்தமலை, சிறுமலை, அழகர்கோவில் மலை, கடவூர் மலை என மலைகள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சும் நகராக நத்தம் உள்ளது. இயற்கைக்கு பஞ்ச மில்லாத இப்பகுதியில் நத்தம் கோவில்பட்டி ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியும், நத்தம் லயன்ஸ் கிளப் நிர்வாகிகளும் இணைந்து மரமே வரம் என்ற தலைப்பில் இலக்கில்லா மரங்களை பள்ளி மாணவர்களிடம் கொடுத்து மாணவர்கள் இடையே மரக்கன்று நடும் பழக்கத்தை உருவாக்குவதுடன், இதுவரை பல ஆயிரத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்து இயற்கைக்கு மேலும் மெருகூட்டி உள்ளனர்.
கடந்த மாதம் பள்ளியில் நடந்த மரமே வரம் என்ற நிகழ்ச்சியில் 500 வேம்பு, மகாகனி, நாவல், கொய்யா உள்ளிட்ட பலன் தரக்கூடிய மரங்களை மாணவர்களின் கைகளில் கொடுத்து அதை நடவு செய்து வளர்த்து பேணி காக்க பயிற்சி அளித்தனர்.
மாணவர்களை கொண்டு இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளது. ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பாக ஒவ்வொரு ஆண்டும் பத்தாயிரம் விதை பந்துகள் தயார் செய்யப்படுகின்றன. இந்த விதைப்பந்துகளை சந்திராயன் 3 ஏவப்பட்ட வெற்றி நிகழ்ச்சி, செஸ் ஒலிம்பியா போன்ற அரசு சார்ந்த நிகழ்ச்சிகளின் மையமாகக் கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் உதவியுடன் அழகர் கோயில் மலைப்பகுதி, வேம்பரளி,சிறுகுடி மலைப்பகுதிகளில் விதைப்பந்துகள் வீசப்படுவதன் மூலம் இயற்கை வளர்க்க இந்த அமைப்பினர் பெரும்பங்கு வகிக்கின்றனர்.
நத்தத்தில் நடக்கும் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர்.
இந்த நேரத்தில் அம்மன் குளம் உள்ளிட்ட பகுதிகளில் பல டன் குப்பைகள் இருக்கும். இதை ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் , லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் இணைந்து அகற்றுவர். இதன் மூலம் மாணவர்கள் மத்தியில் சுற்றுச்சூழலை மாசடையாமல் வைக்கவும், மாணவர்கள் இடையே சமூக சேவையை வளர்க்கும் வகையில் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
எல்லாருக்கும் பங்கு உண்டு
சத்யா, முதல்வர், ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி, நத்தம் கோவில்பட்டி: மரங்களின் முக்கியத்துவத்தை உணராமல் தொடர்ந்து மரங்களை அழித்து வருவதால் பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கு எதிரான கால நிலை மாற்றம், பூமி வெப்பமாதல் இயற்கைசீற்றங்கள் என சுற்றுச் சூழல் மாறுகிறது.
இதனால் ஒரு லிட்டர் தண்ணீர் ரூ.20க்கு வாங்கிப் பருகும் நிலை வந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக பூமி மாறிவிடும் என்பதே கருத்து.
இதனால் இயற்கையை காப்பதில் ஒவ்வொரு மனிதருக்கும் பங்கு உண்டு. எனவே இந்த மரம் வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் மாணவர்களுக்கு இலவசமாக பயன் தரும் மரக்கன்றுகளை கொடுத்து அதனை எவ்வாறு நட்டு பராமரிக்க வேண்டும் என பயிற்சி அளித்து வருகிறோம்.
மரம் நடும் பயிற்சி
தேவா, இயற்கை அலுவலர், நத்தம்: இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் பசுமை முதன்மையாளர் விருது எனக்கு கலெக்டரால் வழங்கி என்னை கவுரவப்படுத்தினர். என்னைப் போலவே நத்தம் ஸ்ரீ மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர்களும் மாணவர்களுக்கு மரம் நடும் பயிற்சியை சிறப்பாக வழங்குகின்றனர்.
அதேபோல் நத்தம் பகுதியில் திருவிழா காலங்களில் அம்மன் குளத்தில் சேரும் பல டன் குப்பையை அகற்றும் பணியை லயன்ஸ் கிளப் நிர்வாகிகள்,பள்ளி மாணவர்களை கொண்டு சிறப்பாக மேற்கொள்கின்றனர்.
பள்ளியில் நடக்கும் மரமே வரம் நிகழ்வில் நானும் பங்கேற்று மாணவர்களுடன் இணைந்து பயிற்சி அளிப்பது மரம் நடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்கிறோம்.