ADDED : மே 29, 2024 04:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை , : சிங்காரக்கோட்டை பகுதியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பாலமுருகன் 26, வேல்வார்கோட்டை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தீக்திஷாவை 19, ஓராண்டிற்கு மேலாக காதலித்தார்.
வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் எதிர்க்க இருவரும் கோயில் ஒன்றில் திருமணம் முடித்தனர்.
* வேடசந்துார் நாகம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயராணி 23, அதே ஊரைச் எலெக்ட்ரிசியன் மனோஜ்குமாரை 24, காதலித்தார். பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தார்.
இவ்விரு ஜோடிகளும் பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். பெற்றோரை வரவழைத்து போலீசார் சமரசம் செய்து அனுப்பினர்.