/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சூறைக்காற்றால் முருங்கை சாகுபடி பாதிப்பு
/
சூறைக்காற்றால் முருங்கை சாகுபடி பாதிப்பு
ADDED : மே 27, 2024 06:14 AM
சின்னாளபட்டி : சின்னாளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கும் சூறைக்காற்றுகளால் முருங்கை பூக்கள் உதிர்ந்து சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சின்னாளபட்டி, பெருமாள்கோயில்பட்டி, அமலிநகர், நடுப்பட்டி, ரெட்டியார்சத்திரம்,குட்டத்துப்பட்டி, மாங்கரை, அம்மாபட்டி, வெயிலடிச்சான்பட்டி, மைலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் செடி முருங்கை சாகுபடியில் அதிகளவில் மேற்கொள்கின்றனர்.
பலர் வெங்காயம் தக்காளி இடையே ஊடுபயிராக சாகுபடி செய்தனர். பெரும்பாலான இடங்களில் முருங்கை மரங்களில் பூக்கள் பெருகி, காய் பிடிக்கும் நிலையில் உள்ளது.
இச்சூழலில் அவ்வப்போது சாரல் மழை, சூறாவளி காற்று வீச துவங்கியதால் முருங்கை பூ, காய்கள் உதிர்தல் அதிகரித்துள்ளது. இதனால் முருங்கை சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குரும்பபட்டி விவசாயி பழனிச்சாமி கூறியதாவது, சூறைக்காற்று, சாரல் மழையால் முருல்கை பூக்கள் உதிர துவங்கியது. மழை நேரங்களில் பூக்களுடன் காய்களும் சிறு மரங்களும் ஒடிந்து வீணாகிறது. இதனால் மகசூல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

