/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் முருகன் மாநாடு; ஏற்பாடுகள் தீவிரம்
/
பழநியில் முருகன் மாநாடு; ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஆக 19, 2024 01:09 AM

திண்டுக்கல்: பழநியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பழநியில் ஆக. 24,25ல் முத்தமிழ் முருகன் மாநாடு நடக்கிறது.
அங்கு 17 இடங்களில் மருத்துவ முகாம்கள்,சுழற்சி முறையில் 34 குழுக்கள்,14 இடங்களில் அவசர ஊர்திகள் ,6 இடங்களில் உணவு தயார் செய்யும் பணிகள்,உணவு தயார் செய்வதை ஆய்வு செய்து தரமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வரும் பக்தர்கர்களுக்கு 20 சக்கர நாற்காலி தயார் நிலையில் வைக்கப்பட்டு அதற்கு தன்னார்வலர்கள் 20 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் பஸ் ஸ்டாண்டிலிருந்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்து செல்ல 10 பேட்டரி கார் பயன்படுத்தப்படவுள்ளது. மக்களை ஒழுங்குபடுத்தி,பாதுகாப்பை உறுதி செய்யவும் எவ்வித சிரமமின்றி வந்து செல்ல தேவையான போலீசார் நியமிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குடிநீர் வழங்க 168 இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 226 இடங்களில் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
600 முதல் 1000 வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகனம் நிறுத்துமிடம் தாயர் நிலையில் உள்ளது. 22 இடங்களில் எல்.இ.டி. திரை வசதி ஏற்படுத்தப்படுகிறது.

