/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அழைப்பிதழில் அலட்சியம்; சுற்றுலாத்துறை மெத்தனம்
/
அழைப்பிதழில் அலட்சியம்; சுற்றுலாத்துறை மெத்தனம்
ADDED : மே 16, 2024 05:35 AM
கொடைக்கானல் : கொடைக்கானலில் நாளை நடக்கும் மலர் கண்காட்சி , கோடை விழாவிற்கான அழைப்பிதழ் நேற்று வரை வழங்கப்படாத நிலை உள்ளது.
தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மலர் கண்காட்சி, கோடை விழாவில் அமைச்சர்கள் ,மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து விழா நடத்தும் சுற்றுலாத்துறை , தோட்டக்கலைத்துறை உயரதிகாரிகள் மலர் கண்காட்சி , கோடை விழாவை துவக்கி வைக்க உள்ளனர்.
சுற்றுலாத்துறை சார்பில் 10 தினங்கள் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து விவரங்கள் இதுவரை தெரியாத நிலையே உள்ளது. நேற்று மாலை வரை விழாவிற்கான அழைப்பிதழ் பிறதுறை அதிகாரிகள் , முக்கிய பிரமுகர்களுக்கு சுற்றுலாத்துறை வழங்கவில்லை. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிகாரிகள் விவரம் தெரியவில்லை.
சுற்றுலாத்துறையின் முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு தெரியாத நிலையில் குழப்பமடைந்துள்ளனர். மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகளில் தோட்டக்கலைத்துறை சுறுசுறுப்பாக செயல்படும் நிலையில் சுற்றுலாத்துறை அழைப்பிதழ் வழங்கும் பணியையே துவக்காமல் அலட்சியமாக உள்ளது. இதனால் பிறதுறை அதிகாரிகள் தங்களது உயரதிகாரிகளுக்கு விழா குறித்த தகவல்களை முறையாக தெரிவிக்க முடியாத நெருக்கடியில் உள்ளனர்.