/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வங்கியின் அலட்சியம்; கண்ணீர் விடும் பென்ஷன் தாரர்கள்
/
வங்கியின் அலட்சியம்; கண்ணீர் விடும் பென்ஷன் தாரர்கள்
வங்கியின் அலட்சியம்; கண்ணீர் விடும் பென்ஷன் தாரர்கள்
வங்கியின் அலட்சியம்; கண்ணீர் விடும் பென்ஷன் தாரர்கள்
ADDED : மே 03, 2024 06:39 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள வங்கியில் பென்ஷன்தாரர்களுக்கான பணத்தை பட்டுவாடா செய்யாமல் இழுத்தடித்ததால் முதியவர்கள் பலர் அழுதபடி சென்றனர்.
திண்டுக்கல் பஸ்ஸ்டாண்ட் திருவள்ளுவர் சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்படுகிறது. இதில் நேற்று நுாற்றுக்கு மேற்பட்ட முதியவர்கள் அழுதபடி நின்றிருந்தனர். 'ஆண்டிற்கு ஒருமுறை சமர்ப்பிக்கப்படும் வங்கியின் சம்பிரதாய செயலான பென்ஷன்தாரர்களின் 'லைவ்' சான்றிதழை மூன்று மாதத்திற்கு முன்பே சமர்ப்பித்து விட்டோம். அதை உரிய இடத்தில் சேர்ப்பதில் வங்கி அலட்சியம் காட்டுகிறது. இதற்காக எங்களது வாழ்வாதாரமான மாத பென்ஷன் தொகை வரவில்லை. எப்போது வரும் என தெரியாது என்ற ரீதியில் வங்கி பணியாளர்கள் பதிலளிக்கின்றனர். இதன் மன உளைச்சலில் என்ன செய்வதென்று புரியவில்லை' என கண்ணீருடன் முதியவர்கள் கூறினர்.வங்கி கிளை மேலாளர் சந்திரகாந்தை சந்திக்க முயன்றபோது , அவரது அறையில் ஏ.சி., மின்விசிறி ஓடியபோதும் யாரும் இல்லை என்ற பதிலே வங்கி ஊழியர்களிடமிருந்து வந்தது.
மனதளவில் சக்தியில்லை
ஜோஸ்பின் ஸ்டெல்லா, பென்ஷன்தாரர், கல்லுப்பட்டி: பென்ஷன்தாரர்களுக்கான லைவ் சான்றதழ் உரிய முறையில் உடனடியாக சமர்ப்பித்தும் தற்போது வரை பென்ஷன் பணம் ஏறவில்லை என வங்கி நிர்வாகம் கூறுகிறது. தனியார் நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளதால் எங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லை என்றால் அபராதம் என்ற போர்வையில் அவர்கள் பன்மடங்கு பணம் எங்களிடம் வசூலிப்பதை தவிர்க்க முடியாது. இதை கூறினால் வங்கி ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்காமல் விரட்டுகின்றனர். வயதான காலத்தில் இப்படியான மனஉளைச்சலை தாங்கும் சக்தி எங்களுக்கு இல்லை. உரிய முறையில் உடனடியாக எங்கள் பென்ஷன் பணத்தை மீட்டு தர வேண்டும் என்றார்.