sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

செய்தி சிலவரிகளில்.......

/

செய்தி சிலவரிகளில்.......

செய்தி சிலவரிகளில்.......

செய்தி சிலவரிகளில்.......


ADDED : ஜூலை 22, 2024 05:38 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவர்கள் தினவிழா

திண்டுக்கல்:திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் தலைமை மன்றத்தின் சார்பில் தெற்கு ரத வீதி மன்ற அலுவலகத்தில் நடிகர் சிவாஜி கணேசன் நினைவு தினம், மறைந்த தலைவர் காமராசர், தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் ஆகியோரின் நினைவு தின விழா நடந்தது. மாவட்ட தலைவர் திருப்பதி தலைமை வகித்தார். ஆலோசகர் டால்டன் முன்னிலை வகித்தார். தலைவர்களின் உருவப்படத்திற்கு மாநகர் மாவட்ட காங்., தலைவர் மணிகண்டன் மாலை அணிவித்தார். துணைத் தலைவர் தண்டபாணி,நிர்வாகி சஞ்சய்குமார் நோட்-டு புத்தகம், வேஷ்டி, சேலைகள் வழங்கினர். நிர்வாகிகள் தவசிநாகராஜன், முத்துக்குமார், வடிவேல்முருகன், கவுதமன், சத்தியன், பாரதி, சுபா, கண்டி, மோதிலால் பங்கேற்றனர்.

குருபூஜை விழா

நத்தம்: நத்தம் திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் நேற்று சுவாமியின் வருடாந்திர குருபூஜை விழா நடந்தது. இதையொட்டி சுவாமியின் ஐம்பொன் சிலைக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது.

லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு

நத்தம்: நத்தத்தில் லயன்ஸ் கிளப் ஆப் நத்தம் சிட்டி கூட்டம் நடந்தது. நத்தம் தலைவர் மகேஸ்வரம் வரவேற்றார். முன்னாள் லயன்ஸ் கவர்னர் சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். கிளப் தலைவராக பாஸ்கரன், செயலாளராக அகமது அபுரார், பொருளாளராக சுப்பிரமணி,இயக்குநர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகி ரவீந்திரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் வாழ்த்தினர். 10 நபர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முன்னாள் செயலாளர் மூர்த்தி நன்றி கூறினார். கிளப் சார்பில் மூங்கில்பட்டியில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us