/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எந்த வேலையாக இருந்தாலும் உயர்ந்தது தானே: உழைப்பவர்கள் சீதனமாக மே தின கொண்டாட்டம்
/
எந்த வேலையாக இருந்தாலும் உயர்ந்தது தானே: உழைப்பவர்கள் சீதனமாக மே தின கொண்டாட்டம்
எந்த வேலையாக இருந்தாலும் உயர்ந்தது தானே: உழைப்பவர்கள் சீதனமாக மே தின கொண்டாட்டம்
எந்த வேலையாக இருந்தாலும் உயர்ந்தது தானே: உழைப்பவர்கள் சீதனமாக மே தின கொண்டாட்டம்
ADDED : மே 01, 2024 07:27 AM

-நமது நிருபர் குழு-
நம்முடைய வாழ்க்கை பயணத்தில் சாதனை படைக்க கடின உழைப்பு அவசியம். பூமி சுழல்வதை நிறுத்தி விட்டால் உலகம் இயங்குவது நின்று விடும், அது போல் உழைக்க தவறும் மனிதனால் வாழ்வில் சாதனையை படைக்க முடியாது. அந்தவகையில் தொழிலாளர்களின் பங்களிப்பை நினைவுகூறும் வகையில் மே 1ம் நாளான இன்று சர்வதேசத் தொழிலாளர்கள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக உழைக்கும் வர்க்கத்தினரின் கருத்துகள் இதோ.
உழைத்து உயர்வோம்
பாலாஜி, தனியார் ஊழியர், திண்டுக்கல் : உழைப்பு என்பது அனைவருக்கும் சமம் தான். கந்தல் துணியை அணிந்து வேலை செய்தாலும், கதர் சட்டையை அணிந்து வேலை செய்தாலும் உழைப்பு உழைப்பு தான். திருட்டு, பொய், சட்ட விரோத செயல் எதுவும் செய்யாமல் பார்க்கும் எந்த வேலையாக இருந்தாலும் அது உயர்ந்தது தான் என்று என்ன வேண்டும். உடலை இயந்திரமாக்கி ஓயாமல் உழைத்து உயர்வோம்.
கொண்டாட்டத்தால் மகிழ்ச்சி
பி.சவுந்தரம், சைக்கிள் கடை தொழிலாளி, வடமதுரை : 13 வது வயதிலிருந்து சைக்கிள் கடையில் பணிபுரிந்து வருகிறேன். தொழிலாளர்களுக்கான தினம் ஒரு நாள் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. உடல் உழைப்புக்காக இன்றைய தினம் பலரும் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். அதே அளவுக்கு உடலுக்கு பலன் தரக்கூடியது சைக்கிள் ஓட்டுதல். அனைவரும் சைக்கிள் ஓட்டினால் சுற்றுச்சூழல் மாசு குறைவதுடன், தேக ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.
உழைப்பிற்கு ஈடு எதுவும் இல்லை
எஸ்.கோபால் ,மெக்கானிக், ஜே.புதுக்கோட்டை : உழைப்பவரின் சீதனமாக மே தினத்தை கொண்டாடுகிறோம். கடின உழைப்பிற்கு ஈடு எதுவும் இல்லை. உண்மையான உழைப்பு, எப்போதும் பலனளிக்க தவறுவதில்லை என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்துள்ளேன். செய்யும் தொழில் எதுவாயினும் நமது உண்மையான ஈடுபாட்டை முழுமையாக அளிக்க வேண்டும். ஆண்டு முழுவதும் உழைக்கும் சமுதாயத்தை கவுரவிக்கும் விதமாக மே தினத்தை கொண்டாடுகிறோம்.
தொழிலாளி என்பதில் கவுரவம்
கவிதா, பிரையன்ட் பூங்கா பணியாளர், கொடைக்கானல்: ஒரு தொழிலாளியாக நாள்தோறும் மலர் நாற்றுகளை பராமரிப்பதும் அவை நன்கு வளர்ந்து பூத்துக் குலுங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தருணத்தில் கூடுதல் உழைப்பை செலவிடும் எண்ணம் உருவாகிறது. சுற்றுலா பயணிகளுக்காக பூங்காவில் ஏராளமான மலர் நாற்றுகள் விற்பனைக்கு வளர்ப்பதிலும் தனது பங்களிப்பு உள்ளது. அவற்றை பராமரிக்கும் பணியிலும் ஈடுபடுவது மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு பெண் தொழிலாளியாக இருப்பது தனக்கு கவுரவமாக உள்ளது.