/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மருந்தில்லை விவகாரம்: டாக்டருக்கு 'மெமோ'
/
மருந்தில்லை விவகாரம்: டாக்டருக்கு 'மெமோ'
ADDED : ஜூன் 01, 2024 05:34 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருந்தில்லை வெளியில் வாங்கி வாருங்கள் என கூறிய விவகாரத்தில் பெண் டாக்டருக்கு மருத்துவமனை நிர்வாகம்'மெமோ'வழங்கியது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் வடமதுரை பிலாத்து பகுதியை சேர்ந்த நசீராபானு27. அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்தது. 4 நாட்களில் நசீரா பானு தன் குழந்தையுடன் வீட்டிற்கு சென்றார். அறுவை சிகிச்சை செய்த இடத்தில் பிரச்னை ஏற்பட நேற்று முன்தினம் திண்டுக்கல் அரசு மருத்துவமனை பிரசவ வார்டிற்கு வந்தார்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இங்கில்லை வெளியில் வாங்கி வாருங்கள் என கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நசீராபானுவின் ,உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக பிரசவ வார்டில் நேற்று முன்தினம் பணியிலிருந்த டாக்டர்களிடம் மருத்துவமனை நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். இதில் சிக்கிய பெண் டாக்டருக்கு 'மெமோ'வழங்கினர்.
இது தொடர்பான முழுவிசாரணை ஜூன் 3ல் அரசு மருத்துவமனையில் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடக்க உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.