/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காய்கறிகளுக்கு இல்லை விலை: விரக்தியில் விவசாயிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
/
காய்கறிகளுக்கு இல்லை விலை: விரக்தியில் விவசாயிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
காய்கறிகளுக்கு இல்லை விலை: விரக்தியில் விவசாயிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
காய்கறிகளுக்கு இல்லை விலை: விரக்தியில் விவசாயிகள்: கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்
ADDED : ஏப் 14, 2024 06:41 AM

மாவட்டத்தில் ஆயிர க்கணக்கான ஏக்கரில் காய்கறி உற்பத்தி செய்யப்படுகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி , கன்னிவாடி, வத்தலக்குண்டு, பழநி, ஒட்டன்சத்திரம், நத்தம், சிறுமலை, வடமதுரை, வேடசந்துார் உள்ளிட்டவை விளைச்சல் பகுதிகளாகும். வியாபாரிகள் நிர்ணயிக்கப்படும் விலை மாற்றங்களே விவசாயிகளின் தலையெழுத்தை நிர்ணயிருப்பதாக உள்ளது.
வியாபாரிகள் இடைத்தரகர்களிடையே ஏற்படும் பேரத்தால் விவசாயிகள் உற்பத்தி காய்கறிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் வெகுவாக பாதிக்கும் சூழல் உள்ளது. வியாபாரிகள், இடைத்தரகர்கள் அதிக லாபம் ஈட்டுவதால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். இந்நிலையை தவிர்க்க அரசு இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் ஆண்டாண்டாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
குறிப்பாக கொடைக்கானல், தாண்டிக்குடி மலை பகுதியில் உற்பத்தி செய்யப்படும் முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, அவரை ,மலைப்ப்பூண்டு, சவ்சவ், பீன்ஸ், டர்னிப் ,நூல்கோல், முள்ளங்கி, கேரட் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. கால நிலைக்கு ஏற்ப இதில் விளைச்சல் மாறுபடுகிறது. இந்நிலையால் ஒரு போகத்தில் கிடைக்கும் லாபம் மறு போகத்தில் கிடைக்காத சூழலில் விவசாயிகள் பாதிக்கின்றனர். இந்நிலையை தவிர்க்க மாவட்ட வேளாண் விற்பனைத்துறை கவனம் செலுத்தி விவசாயிகளுக்கு தொழில்நுட்ப வசதிகளையும், முன்னறிவிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

