தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ.,வினர் புகார்

எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ.,வினர் புகார்

எஸ்.பி., அலுவலகத்தில் பா.ஜ.,வினர் புகார்


ADDED : செப் 29, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், செப்.30-

திண்டுக்கல் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், பொதுச்செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் எஸ்.பி., அலுவலகத்தில் கூடுதல் எஸ்.பி., தெய்வத்தை சந்தித்து புகார் மனு அளித்தனர்.அதில், ‘மாநகர் மாவட்ட காங்.,கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை தரக்குறைவாக விமர்சித்ததுடன், அவர்களது உருவ பொம்மை எரிக்க முயன்றனர். அவர்களின் செயல் ஜனநாயகத்திற்கு எதிராகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து வன்முறையை துாண்டும் விதமாக உள்ளது.பிரதமராக உள்ளவரை ஒருமையில் பேசி தரம் தாழ்ந்து விமர்சித்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us