/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் பேரூராட்சியில் கலையரங்கம் திறப்பு
/
நத்தம் பேரூராட்சியில் கலையரங்கம் திறப்பு
ADDED : மார் 03, 2025 04:56 AM

நத்தம் : நத்தத்தில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் எம்.பி நிதியிலிருந்து ரூ.45 லட்சம் மதிப்பில் கலையரங்கம், மாரியம்மன் கோவில் முன்பு உயர் கோபுரமின் விளக்கு,அவுட்டர் பகுதியில் பயணிகள் நிழற்குடை புதிதாக கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நடந்தது. நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், மாவட்ட பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிசாமி, பேரூராட்சி செயல் அலுவலர் விஜயநாத் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் எம்.பி.,சச்சிதானந்தம் கலையரங்கம், உயர் கோபுர விளக்கு , பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துகுமார்சாமி, சாணார்பட்டி தி.மு.க., ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் குழந்தைவேல்பங்கேற்றனர்.