/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போட்டித்தேர்வு மைய பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
/
போட்டித்தேர்வு மைய பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
போட்டித்தேர்வு மைய பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
போட்டித்தேர்வு மைய பாதுகாப்பு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
ADDED : ஆக 06, 2024 05:00 AM
திண்டுக்கல்: டில்லி ஐ.ஏ.எஸ்., பயிற்சி அகடாமி சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் நகரில் செயல்படும் தனியார் அரசு போட்டித்தேர்வு மையங்களின் பாதுகாப்பு தன்மை குறித்த அறிக்கை தயாரித்து சமர்பிக்க பயிற்சி மையங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டிஸ் வழங்கி உள்ளது.
டில்லியில் சில நாட்களுக்கு முன் பெய்த மழையில் ஐ.ஏ.எஸ்.,பயிற்சி அகாடமியில் மழைநீர் சூழ்ந்தது. அப்போது வெளியில் வரமுடியாமல் சில மாணவர்கள் பலியாகினர்.
இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் தனியார்,அரசு போட்டித்தேர்வு பயிற்சி மையங்களை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
கட்டட உறுதித்தன்மை, அனுமதி பெற்ற ஆவணங்கள், குடிநீர், சுகாதார வசதிகள், தங்கும் இட வசதிகள், பயிற்சியாளர்கள், மாணவர்கள் விபரங்களை அறிக்கையாக தயாரித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும் என தனியார், அரசு போட்டித்தேர்வு மையங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டிஸ் வழங்கி உள்ளது.
மழைக்காலம் தொடங்கியிருப்பதால் பொது மக்கள் அதிகம் கூடும் பகுதியில் உள்ள கட்டடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்யவும் நகரமைப்பு அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.