ADDED : ஆக 16, 2024 05:08 AM
*பழநி: நகராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ செந்தில்குமார் கொடியேற்றினார்.
நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர். ரயில்வே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் துாய மணி வெள்ளைச்சாமி கொடியேற்றினார். எஸ்.ஐ.,கள் பொன்னுச்சாமி, மணிகண்டன் பங்கேற்றனர். ஹிந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தலைமை அலுவலகம் முன்பு துணைத் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜெகன் கொடியேற்றினார். பழநி காங்., கட்சி சார்பில் நகரத் தலைவர் முத்துவிஜயன் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட துணை தலைவர் பத்மினிமுருகானந்தம் பங்கேற்றனர். பழநி அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் முன்னாள் மாணவி நிவேதா பங்கேற்றார். பள்ளி நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலர் பட்டாபிராமன், முதல்வர் மங்கையர்க்கரசி பங்கேற்றனர். பழநி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் சண்முகநாதன் தலைமையில் நகர துணைத் தலைவர் திருஞானசம்பந்தம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் மணிகண்ணன் பங்கேற்றனர். பழநி கே.ஜி.,வலசு தேவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஞானம், தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முதல்வர் சந்திரசேகர் பங்கேற்றனர். பழநி ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் காசி ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றினார். முன்னாள் மாணவர் நவநீத பிரபு பங்கேற்றனர்.

