/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திருஊடல் நிகழ்ச்சியுடன் பங்குனி விழா நிறைவு
/
திருஊடல் நிகழ்ச்சியுடன் பங்குனி விழா நிறைவு
ADDED : மார் 28, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவில் திருஊடல் நிகழ்ச்சி, கொடி இறக்குதல் உடன் உற்ஸவம் நிறைவடைந்தது.
பங்குனி உத்திர திருவிழா மார்ச் 18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. உள்ளூர் , வெளியூர் பக்தர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி நதியிலிருந்து தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.
தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா, மார்ச் 23ல் திருக்கல்யாணம்,மார்ச் 24ல் தேரோட்டம், பத்தாம் நாள் திருவிழாவான நேற்று (மார்ச் 27) காலை கோயில் கதவை திறக்கும் திரு ஊடல் நிகழ்ச்சி, இரவு கொடி இறக்குதல், தங்க குதிரை வாகனத்தில் சுவாமி அம்மன் கோயிலுக்கு புறப்பாடு நடைபெற்றது.