/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம்
/
முருகன் கோயில்களில் பங்குனி உத்திரம்
ADDED : மார் 25, 2024 06:58 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் திருக்கோயிலில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணிய சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்கு பின், தீபாராதனை நடந்தது.
முன்னதாக பால தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.அபிராமி அம்மன் கோயில் ஆறுமுகப் பெருமான் சுவாமிகளுக்குசிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தன. ஒய்.எம்.ஆர்.பட்டி சுப்பிரமணிய சுவாமிகோயில், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயில், கூட்டுறவு நகர் முருகன் கோயில், கந்தகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்செய்தனர். பட்டிவீரன்பட்டி : எஸ்.தும்மலப்பட்டி வள்ளி தேவசேனா உடனுறை பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பாலசுப்பிரமணியருக்கு திருக்கல்யாணம் நடந்தது. பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம்,தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது. நேற்று காலை பால்குடம், காவடிகள், பாலபிஷேகம் அன்னதானம் நடந்தது. இரவு பாலசுப்பிரமணியர் புஷ்ப பல்லக்கில் உலா வந்தார். இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.

