/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிகளால் மக்கள் தவிப்பு...
/
பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிகளால் மக்கள் தவிப்பு...
பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிகளால் மக்கள் தவிப்பு...
பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டிகளால் மக்கள் தவிப்பு...
ADDED : ஆக 16, 2024 05:13 AM

பெயர்பலகையால் குழப்பம்
எரியோட்டிலிருந்து நாகையகோட்டைக்கு செல்லும் ரோடு அன்னசமுத்திரம் அருகே இருக்க வேண்டிய பெயர் பலகை செங்கோட்டைப்பட்டிக்கு முன்னதாக உள்ளது. ஒரே இடத்தில் இரு ஊர் பெயர்கள் இருப்பதால் வெளியூர் பயணிகள் குழப்புகின்றனர்.- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமசாமி,எரியோடு.-------.......
சேதமான ரோடால் அச்சம்
நத்தம் மெய்யம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ரோட்டின் நடுவில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சேதமான ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீரா,நத்தம்.--------.......
பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டி
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கொத்தப் புள்ளி அருகே சமத்துவபுரத்தில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி கிடப்பில் விடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. சீரமைத்து செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கு.மணிவேல், கொத்தப்புள்ளி.------.......
பள்ளத்தால் அவதி
நிலக்கோட்டை காமராஜர் மேற்கு வீதியில் பைப் லைன் அமைக்க தோண்டிய பள்ளம் மூடாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தோண்டிய பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் முகமது, நிலக்கோட்டை .------.......
சுகாதாரக்கேடை ஏற்படுத்தும் கழிவுநீர்
திண்டுக்கல் சின்னையாபுரம் ரயில்வே சுரங்க பாதையில் மழை நீருடன் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடை ஏற்படுத்துகிறது. இந்த வழியில் வாகன ஓட்டிகள் ஏராளமாக சென்று வருவதால் தண்ணீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாலட்சுமி, திண்டுக்கல்.......
------துார்வாராத கால்வாயால் அச்சம்
பழநி -திண்டுக்கல் ரோடு காலேஜ் பஸ் ஸ்டாப்பிலிருந்து இடும்பன் கோயில் செல்லும் ரோட்டில் சாக்கடை கால்வாய் துார் வாராமல் கழிவுநீர் தேங்கியுள்ளது. மழை நேரங்களில் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. கால்வாய் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும். கோபி, பழநி.--------........
குப்பையால் சீர்கேடு
திண்டுக்கல் அனுமந்தநகரில் குவிந்துள்ள பிளாஸ்டிக் கலந்த குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. மாடுகள் மேய்வதால் அவைகளும் பாதிக்கப்படுகின்றன. குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். முரளி, திண்டுக்கல்.
.....................................................

