ADDED : ஆக 17, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம்- குட்டுப்பட்டி,சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியமலையூர், சின்ன மலையூர், பள்ளத்துக்காடு, வலசை உள்ளிட்ட பகுதிகள் தரை மட்டத்தில் இருந்து 9 கிலோ மீட்டர்துாரத்தில் உள்ளன. இந்த ஊர்களுக்கு இதுவரை சாலை ,மருத்துவ வசதி இல்லை. இதன் வசதி கோரி இப்பகுதி மக்கள் திண்டுக்கல் -நத்தம் நெடுஞ்சாலையில் சேர்வீடு பிரிவு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாசில்தார் சரவணன், டி.ஸ்.பி., உதயகுமார் , இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக கூற கலைந்து சென்றனர்.