ADDED : ஆக 08, 2024 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் நரிப்பாறை, நாராயண பிள்ளை சந்து பகுதியில் குடிநீர் வரவில்லை எனக்கூறி அப்பகுதியினர் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.திண்டுக்கல் நரிப்பாறை, நாராயண பிள்ளை சந்து உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வரவில்லை.
மக்கள் காலி குடங்களோடு காந்திஜி புதுரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி பொறியாளர் சுப்பிரமணியன்,தெற்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிதண்ணீர் உடனே சப்ளை செய்யப்படும் என கூற கலைந்தனர். சிறிது நேரத்தில் லாரியில் குடிநீர் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்பட்டது.