/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை'யில் ரம்யமான சூழல் பயணிகள் வருகை அதிகரிப்பு
/
'கொடை'யில் ரம்யமான சூழல் பயணிகள் வருகை அதிகரிப்பு
ADDED : மே 28, 2024 08:40 PM

கொடைக்கானல்:கொடைக்கானலில் நிலவும் ரம்யமான சூழலை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்தனர்.
சிலவாரங்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கொடைக்கானலில் தொடர்மழை பெய்ய மலர் கண்காட்சி , கோடை விழாவிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ல் பள்ளிகள் திறக்க உள்ளதை அடுத்து தற்போது பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மழையின்றி வெயிலின் தாக்கம் தணிந்து குளுகுளு சீதோஷ்ண நிலை நீடிப்பதால் பயணிகள் விரும்பி வருகின்றனர். இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தும், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.
பேரிஜம் ஏரிக்கு அனுமதி
முதல்வர் ஸ்டாலின் வருகை , தொடர் காட்டுத்தீ, யானை நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பேரிஜம் ஏரிக்கு செல்ல ஒரு மாதமாக அனுமதி மறுக்கப்பட்டது. தற்போது சகஜமான நிலை திரும்பியதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி அளித்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.