ADDED : ஜூலை 30, 2024 05:57 AM
டூவீலர்கள் மோதி வாலிபர் பலி
நிலக்கோட்டை: பள்ளபட்டியை சேர்ந்தவர் காமாட்சி 19. நண்பர் கோபிநாத் 19, இருவரும் டூவீலரில் நிலக்கோட்டை சென்றுவிட்டு ஊர் திரும்பினர். முன்னாள் மற்றொரு டூவீலரில் சென்று கொண்டிருந்த அஜித் குமார் 27 , திடீரென திருப்பியதில் 2 டூவீலர்களும் மோதின. இதில் காமாட்சி இறந்தார்.
இருவர் கைது
திண்டுக்கல்: கிழக்கு ஆரோக்கியமாதா கோவில் தெருவை சேர்ந்தவர்கள் டேவிட்விஜய்22,தனுஷ்லால்25. இருவரும் திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தனர். வடக்கு போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
லாரிகளை பிடித்த போலீசார்
திண்டுக்கல்: ரெட்டியார் சத்திரம் அம்மாபட்டி கண்மாயில் மணல் அள்ளிய 3 லாரிகள் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே வந்தது. வாகன சோதனையில் ஈடுபட்ட தாடிக்கொம்பு போலீசார் 3 லாரிகளையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
புகையிலை பறிமுதல்
நத்தம்:- நத்தம் அருகே வத்திபட்டி பகுதி கடைகளில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, எஸ்.ஐ., கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மளிகைகடையில் புகையிலை பொருட்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கபட்டது.
புகையிலை பொருட்கள் வைத்திருந்த வத்திபட்டியை சேர்ந்த சிவக்குமார் 40, லிங்கவாடியை சேர்ந்த முனுசாமி 43, இருவரையும் கைது செய்த நத்தம் போலீசார், அவர்களிடமிருந்து 20 புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
மின்கம்பம் முறிந்து கேங்மேன் பலி
கள்ளிமந்தையம்: துாத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மருதன் வாழ்வு நடுத்தெருவை சேர்ந்தவர் சுந்தரராஜ் 37. கள்ளிமந்தையம் மின்வாரிய அலுவலகத்தில் கேங்மேனாக வேலை செய்து வந்தார். இரு நாட்களுக்கு முன்பு கள்ளிமந்தையம் உதவி பொறியாளர் இசக்கி தலைமையில் பாலப்பன்பட்டி தோட்டம் அருகே உள்ள மின்கம்பம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மின்கம்பம் கீழே விழுந்ததில் சுந்தரராஜ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த சுந்தரராஜ் நேற்று இறந்தார்.கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் மாடு விழுந்து பலி
வேடசந்துார்: நாகம்பட்டி ஊராட்சி லவுகணம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கந்தசாமி 65. தனது தோட்டத்தில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
மேய்ச்சலுக்கு சென்ற ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு ஒன்று தோட்டத்து கிணற்றுக்குள் விழுந்து பலியானது. வேடசந்துார் தீயணைப்பு அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் மாட்டின் உடலை மீட்டனர்.
கம்பெனியில் புகுந்து திருட்டு
வேடசந்துார்: மாரம்பாடியை சேர்ந்தவர் ஸ்டீபன் 30. விட்டல்நாயக்கன்பட்டி அருகே ஹாலோ பிளாக் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இங்கு நேற்று முன் தினம் இரவு புகுந்த நபர்கள் லேப்டாப், மரம் அறுவை இயந்திரம் ,பணம் ஆகியவற்றை திருடி சென்றனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.