/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்லாப்பெட்டியில் பணம் எடுத்த போலீஸ்: வைரலாகும் விடியோ
/
கல்லாப்பெட்டியில் பணம் எடுத்த போலீஸ்: வைரலாகும் விடியோ
கல்லாப்பெட்டியில் பணம் எடுத்த போலீஸ்: வைரலாகும் விடியோ
கல்லாப்பெட்டியில் பணம் எடுத்த போலீஸ்: வைரலாகும் விடியோ
ADDED : ஆக 04, 2024 07:06 AM

சாணார்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே செங்குறிச்சி அரசு டாஸ்மாக் பாரில் சோதனை செய்ய வந்த மதுவிலக்கு போலீசார் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்து சென்ற வீடியோ காட்சி வைரலாகி வருகிறது
செங்குறிச்சியில் அரசு அனுமதி பெற்ற பார் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் மதுவிலக்கு எஸ்.ஐ., முத்துக்குமார் ஜூலை 27 ல் போலீசாருடன் சென்றுள்ளார். அங்கிருந்த முதியவர் பையில் வைத்திருந்த ரூ. 400, பாரில் விற்பனை செய்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.17 ஆயிரத்தை முத்துக்குமார் , அவருடன் வந்த போலீஸ்காரர் ஒருவர் எடுத்து சென்று உள்ளார். இது பாரில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ நேற்று முதல் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அன்றைய தினம் செங்குறிச்சி பாரில் ரூ.1100 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.