ADDED : ஆக 09, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
வடமதுரை: வடமதுரையில் ஒன்றிய ஹிந்து குலாலர் சமுதாய நல அறக்கட்டளை சார்பில் 11வது ஆண்டாக அதிக மதிப்பெண் பெற்ற 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாராட்டு, பரிசளிப்பு விழா நடந்தது.
நிர்வாக தலைவர் கணேசன் தலைமை வகித்தார். நிதி அறங்காவலர் கதிரேசன் வரவேற்றார். அறங்காவலர் ஜெயராமன் ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். 15 அறங்காவலர்கள் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் நலம் மருத்துவமனை டாக்டர் சிவக்குமார், அரசு மருத்துவக் கல்லுாரி உதவி பேராசிரியர் பரணிதரன், மதுரை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பானுமதி, ஜே.பி.மருத்துவமனை டாக்டர் ஹரிபிரசாந்த், வர்த்தக பிரமுகர்கள் தங்கவேல், முருகன், லோகநாதன், குலாலர் மாநில சங்க நிர்வாகி கண்ணன் பங்கேற்றனர். அறங்காவலர் முருகன் நன்றி கூறினார்.
