/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூஜாரியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கு தள்ளி வைப்பு
/
பூஜாரியை தற்கொலைக்கு துாண்டிய வழக்கு தள்ளி வைப்பு
ADDED : ஆக 12, 2024 11:41 PM
திண்டுக்கல் : தேனி மாவட்டம் பெரியகுளம் டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கோயில் பூஜாரியை தற்கொலைக்கு துாண்டியதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா மீதான வழக்கு விசாரணையை ஆக.,20க்கு திண்டுக்கல் நீதிமன்றம் தள்ளிவைத்தது.
டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த கோயில் பூஜாரி நாகமுத்து. இவர் 2012ல் தற்கொலை செய்தார். அவரை தற்கொலைக்கு துாண்டியதாக ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு திண்டுக்கல் மாவட்ட தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது.
நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஓ.ராஜா உள்ளிட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராயினர். அரசு தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முரளிதரன், விசாரணையை ஆக., 20க்கு தள்ளி வைத்தார்.

