/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கேள்விக்குறியான சுகாதாரம்; தவிப்பில் ---குட்டத்துப்பட்டி ஊராட்சி மக்கள்
/
கேள்விக்குறியான சுகாதாரம்; தவிப்பில் ---குட்டத்துப்பட்டி ஊராட்சி மக்கள்
கேள்விக்குறியான சுகாதாரம்; தவிப்பில் ---குட்டத்துப்பட்டி ஊராட்சி மக்கள்
கேள்விக்குறியான சுகாதாரம்; தவிப்பில் ---குட்டத்துப்பட்டி ஊராட்சி மக்கள்
ADDED : மார் 05, 2025 06:32 AM

ரெட்டியார்சத்திரம்: போதிய சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி சுகாதாரக்கேடான சூழலில் குட்டத்துப்பட்டி ஊராட்சி மக்கள் அவதிப்படுகின்றனர்.
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சியில் 10க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் இருந்தபோதும் வசதிகளில் மிகவும் பின்தங்கி உள்ளன. தண்ணீர், சாக்கடை, ரோடு வசதிகள் எட்டாக்கனியாகவே உள்ளது.
சுகாதாரமான சூழல் இல்லாமல் தொற்று பாதிப்பால் பலரும் சிரமப்படுகின்றனர். பழநி ரோடு அக்கரைப்பட்டியிலிருந்து கூட்டத்துப்பட்டி வரை ரூ.2.5 கோடி மதிப்பில் தரைப்பாலங்கள், ரோடு விரிவாக்க பணிகள் நடக்கிறது. ரோடு சீரமைப்பில் அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து வசதிக்காக இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மாணவர்கள் சிரமம்
குணசேகரன்,விவசாயி, காலாடிபட்டி:அக்கரைப்பட்டியிலிருந்து மயிலாப்பூர் செல்லும் ரோடு சீரமைப்பு பணி தொடங்கி 4 வாரங்களுக்கு மேலாகிவிட்டது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பாலங்கள் பராமரிப்பு பகுதியில் வலுவான துணை பாலம் அமைக்கப்படவில்லை. பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான இடங்களில் ரோடு முறையாக அமைக்கப்படவில்லை. டூவீலர்களில் செல்வோர் மட்டுமின்றி மாணவர்கள், விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கொசுத்தொல்லை
மகேந்திரன்,சமூக ஆர்வலர், மைலாப்பூர்: போதிய கண்காணிப்பு இல்லாத சூழலில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரோடு சீரமைப்பால் விவசாயிகளும் மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை. மாணவர்கள்,உரிய நேரங்கள் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் உள்ளது. ஊராட்சிக்கு உட்பட்ட மைலாப்பூர், புளியராஜக்காபட்டி, காலனி, குட்டத்துப்பட்டி, பெரியார் நகர், குஞ்சனம்பட்டி, அனுப்பப்பட்டி ஆவரம்பட்டி உள்பட பல கிராமங்களில் போதிய வடிகால் வசதியற்ற சூழலில் அசுத்த நீர் தேங்கி கொசுக்களின் உற்பத்தி மையமாக மாறி உள்ளது.
சுகாதாரம் மோசம்
சஞ்சீவி, தனியார் நிறுவன ஊழியர், குட்டத்துப்பட்டி: வீடு தோறும் குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டம் முழுமையாக கூடசெயல்பாட்டில் இல்லை. பல இடங்களில் தண்ணீருக்காக குடங்களுடன் காத்திருக்கும் அவலம் நீடிக்கிறது. சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் பிடிக்க வேண்டியுள்ளது. அனைத்து தெருக்களிலும் சாக்கடை பராமரிப்பின்றி மண் நிரவியுள்ளது. பல இடங்களில் அசுத்த நீர் செல்ல வழியின்றி தேங்கி உள்ளது. கலையரங்கம், பஸ் ஸ்டாப் பகுதியில் பராமரிப்பின்றி புதர் மண்டியுள்ளது. கொசு மருந்து தெளிப்பதில்லை. போதிய தெருவிளக்கு வசதி இன்றி விஷப்பூச்சிகளால் பலர் பாதிக்கிறனர்.