/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மறியல்
/
திண்டுக்கல்லில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: மறியல்
ADDED : செப் 04, 2024 07:00 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் திருச்சி ரோட்டில் தள்ளு வண்டி கடை ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றியதால் வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
திண்டுக்கல் திருச்சி ரோடு கல்லறை மேடு அருகில் நெடுஞ்சாலைத்துறை மாநகராட்சிக்கு சொந்தமான நிலத்தில் தள்ளுவண்டி,தரைக்கடைகள் நீண்ட நாட்களாக செயல்படுகிறது.
அவ்வழியில் வரும் வாகன ஓட்டிகள் ரோட்டில் நின்றபடியே தள்ளு வண்டி கடைகளில் பொருட்களை வாங்குகின்றனர்.
இதனால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வர, நெடுஞ்சாலைத்துறை,மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து திருச்சி ரோடு பகுதி ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
முன்னறிவிப்பும் இல்லாமல் கடைகளை அகற்ற கூடாது எனக்கூறி வாக்குவாதம் செய்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். மேற்கு இன்ஸ்பெக்டர் வினோதா,எஸ்.ஐ.,மலைச்சாமி தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
அதே பகுதியில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் கட்டட வேலைக்கு தேவையான செங்கல்,மண் போன்ற பொருட்களை விற்பனை செய்ய வைத்திருந்தார்.
அதையும் அதிகாரிகள் அகற்ற முன்வந்தபோது அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அங்கிருந்த போலீசார் 10 நாட்களுக்குள் பொருட்களை அகற்ற வேண்டும் என கால அவகாசம் பெற்று கொடுத்தனர்.