/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாடகையில் இயங்கும் தபால் அலுவலகம்
/
வாடகையில் இயங்கும் தபால் அலுவலகம்
ADDED : மே 06, 2024 12:48 AM
வடமதுரை : வடமதுரையில் குறுகலான தெரு வீதியில் வாடகை கட்டடத்தில் தபால் நிலையம் இயங்குவதால் மக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
வடமதுரையில் பல ஆண்டுகளுக்கு முன் வரை தபால் நிலையம் வடமதுரை பேரூராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாப் அருகில் வாடகை இடத்தில் இயங்கியது. தற்போது அண்ணா நகர் விரிவாக்க பகுதியில் வாடகை கட்டடத்தில் உள்ளது. இப்பகுதிக்கு முறையான பாதை வசதி இல்லை. குண்டும், குழியுமான ரோடு கொண்ட தனியார் இடம், சுற்றுப்பாதையாக கூட்டுறவு பாங்க் வளாக பாதையை பயன்படுத்தி செல்ல வேண்டியது. இதனால் இப்பகுதி மக்கள் தபால் நிலைய சேவையை பயன்படுத்த அவசியமற்ற அலைச்சல், சிரமங்களை சந்திக்கின்றனர்.
வடமதுரை பழைய போலீஸ் குடியிருப்பு அருகில் தபால் நிலையத்திற்கென இடம் வாங்கப்பட்டு பல ஆண்டுகளாகியும் கட்டடம் அமைக்க நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளது.
தபால் நிலையத்திற்கென இடத்தில் கட்டட வசதி உருவாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.