/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கார் மோதி காயமுற்ற மயில் மீட்பு
/
கார் மோதி காயமுற்ற மயில் மீட்பு
ADDED : ஜூன் 02, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலுார் எரியோடு ரோட்டில் முல்லாம்பட்டி பிரிவு பகுதியில் நேற்று காலை ரோட்டின் குறுக்கே பறந்த 2 வயது பெண் மயில் கார் மோதி காயமடைந்து விழுந்தது.
மயிலை மீட்ட பாகாநத்தம் நவநீதகிருஷ்ணன் வனத்துறையினருக்கு தகவல் தந்தார். இதையடுத்து வனவர் கார்த்திகேயன், வனபாதுகாவலர் ஆண்டி மயிலை பெற்று பாகாநத்தம் கால்நடை மருந்தகத்தில் டாக்டர் ரமேஷிடம் சிகிச்சை அளித்தனர்.
ஒரு மணி நேரம் அங்கு இருந்த மயில் பின்னர் பறந்து சென்றது.