/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இ---பாஸ் முறையில் மறுபரிசீலனை விடுதிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
/
இ---பாஸ் முறையில் மறுபரிசீலனை விடுதிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
இ---பாஸ் முறையில் மறுபரிசீலனை விடுதிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
இ---பாஸ் முறையில் மறுபரிசீலனை விடுதிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : மே 05, 2024 04:33 AM
கொடைக்கானல், : கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் மே 7 லிருந்து இ--பாஸ் எடுத்து வரும் நிலையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கொடைக்கானல் ஓட்டல் , ரிசார்ட் உரிமையாளர் சங்கம் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இச்சங்கத்தின் கூட்டம் தலைவர் அப்துல்கனிராஜா தலைமையில் நடந்தது. செயலாளர் சலாமத், பொருளாளர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மே 7 லிருந்து ஜூன் 30 வரை கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ -பாஸ் எடுத்து வர உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் இதை தமிழக அரசு ,நீதிமன்றம் மறு பரிசீலனை செய்ய வேண்டும். சீசன் போது கூடுதல் போலீசார் நியமித்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். அரசு கொடைக்கானலில் மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பெருமாள்மலைப் பகுதியில் சுற்றுலா பஸ்கள் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விடுதிகளை தவிர்த்து சட்ட விரோதமாக செயல்படும் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் . இ -பாஸ் நடைமுறையை தளர்த்தாத பட்சத்தில் சீசனில் விடுதிகள்,உணவகங்கள் அனைத்தும் காலவரையின்றி மூடப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.