/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தருமத்துப்பட்டியில் ரோடு மறியல்
/
தருமத்துப்பட்டியில் ரோடு மறியல்
ADDED : ஜூன் 21, 2024 05:10 AM
கன்னிவாடி: தருமத்துப்பட்டியில் ஊராட்சி நிர்வாகத்தை கவனிப்பதில் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் சிலர் ஒரு பிரிவாகவும் ஊராட்சி செயலர் இன்னாசி மற்றொரு பிரிவாகவும் செயல்படுகின்றனர்.
இதனால் மெயின் ரோட்டில் தனி அலுவலகம் அமைத்து ஊராட்சி செயலர் வரி வசூல் உள்ளிட்ட பணிகளை கவனிக்கிறார். இரட்டை நிர்வாக அலுவலகங்களால் குளறுபடிகள், பணிகளில் தொய்வு, அலைக்கழிப்பு,அதிகாரிகள் அலட்சியம் இதனால் கிராம மக்கள் பாதிப்படுகிறோம். ஊராட்சி செயலர் தரக்குறைவாக பேசுவதால் இடமாற்றம் செய்ய வேண்டும். வேலை உறுதி திட்ட பணி வழங்கலில் பாரபட்சம் நிலவுவதாக கூறி செவனக்கரையான்பட்டி கிராம மக்கள் நேற்று செம்பட்டி பழநி ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். எஸ்.ஐ.., கோட்டைராஜன், பி.டி.ஓ., மலரவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் கலைந்தனர். இதனால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்து, வெளியூர் பயணிகள் அவதியடைந்தனர்.-