ADDED : செப் 18, 2024 04:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சாலை பணியாளர்கள் சங்க 25ம் ஆண்டு வெள்ளி விழா , 9வது மாநில பிரதிதிநித்துவ பேரவை சிறப்பு மாநாடு நடைபெற்றது.
மாநிலத்தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத்தலைவர் ராஜமாணிக்கம் தீர்மானம் வாசித்தார். வரவேற்புக்குழு தலைவர் ஜெயசீலன் வரவேற்றார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராணி பேசினார். மாநில பொதுச்செயலாளர் அம்சராஜ், பொருளாளர் தமிழ், அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ( சா.டேனியல் ஜெயசிங், தோழமைச்சங்க தலைவர்கள் வெங்கடேஷன்,மங்களப்பாண்டியன், அன்பரசு, முபாரக் அலி, சுரேஷ்குமார், மகாலிங்கம், தனசீலன், சி.ஐ.டி.யு., பிரபாகரன், ஜெசி, திருமுருகன் கலந்து கொண்டனர். மாலையில் குமரன் பூங்காவிலிருந்து குடும்பத்துடன் சாலைப்பணியாளர்கள் ஊர்வலம் நடந்தது.