/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அலைபேசிகளை பறித்தவர்கள் சுற்றிவளைப்பு
/
அலைபேசிகளை பறித்தவர்கள் சுற்றிவளைப்பு
ADDED : ஆக 28, 2024 05:11 AM
வடமதுரை : திண்டுக்கல் பகுதியில் ரோட்டில் பயணித்த, நின்றிருந்தவர்களிடம் அலைபேசிகளை பறித்த தஞ்சாவூரை சேர்ந்த இருவரை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
புத்துார் குருந்தம்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் சிவக்குமார் 35. நேற்று முன்தினம் இரவு நண்பர் ஆனந்தக்குமார் ஓட்டிய டூவீலரில் பின்னால் அமர்ந்தபடி அலைபேசியை பார்த்தபடி வந்தார்.
வெள்ளபொம்மன்பட்டி பகுதியில் வரும் போது மற்றொரு டூவீலரில் வந்த இருவர் சிவக்குமாரின் அலைபேசியை பறித்து சென்றனர்.
வழியில் உள்ள நண்பர்களுக்கு சிவக்குமார் தகவல் தெரிவிக்க அலைபேசி பறித்தவர்கள் எஸ்.புதுப்பட்டி பகுதியில் பிடிப்பட்டனர்.
சிக்கியவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் மணிகண்டன் 21, மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும், இவர்கள் கொடைக்கானல் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும்போது செம்பட்டி வீரக்கல் பிரிவு பகுதியில் முருகனின் அலைபேசியை பறித்துவிட்டு, வடமதுரையில் 2வது பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டபோது சிக்கி கொண்டது தெரிந்தது.
இருவரையும் கைது செய்த வடமதுரை போலீசார் அலைபேசிகள், டூவீலரை பறிமுதல் செய்தனர்.

