/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரூ.3.31 கோடி பறிமுதல்; ரூ.8.77 லட்சம் விடுவிப்பு
/
ரூ.3.31 கோடி பறிமுதல்; ரூ.8.77 லட்சம் விடுவிப்பு
ADDED : ஏப் 09, 2024 12:35 AM
திண்டுக்கல் : மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.3.31 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் சமர்பித்ததால் ரூ.8.77 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் மார்ச் 16ல் அமலுக்கு வந்த நிலையில் 50,000 பணம், ரூ.10,000 க்கு மேல் பரிசு பொருட்களை ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் கைப்பற்றப்படுகிறது.
இதை கண்காணிக்க 24 பறக்கும் படைகள், 24 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 8 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனைகளில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 21,96,181, ரூ.3,09,79,550 மதிப்பிலான தங்கம் வெள்ளி ஆபரணங்கள், ரூ.17,880 மதிப்பிலான மது வகைகள் என 23 இடங்களில் 3,31,93,611 மதிப்பிலான பணம் , பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
6 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கு ஆவணங்கள் ஒப்படைத்ததால் ரூ.8,77,190 விடுவிக்கப்பட்டது.

