/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டு பன்றிகளால் சேதமாகும் மலைப்பூண்டு நீதிமன்றத்தை நாட ஆர்.டி.ஓ., அறிவுரை
/
காட்டு பன்றிகளால் சேதமாகும் மலைப்பூண்டு நீதிமன்றத்தை நாட ஆர்.டி.ஓ., அறிவுரை
காட்டு பன்றிகளால் சேதமாகும் மலைப்பூண்டு நீதிமன்றத்தை நாட ஆர்.டி.ஓ., அறிவுரை
காட்டு பன்றிகளால் சேதமாகும் மலைப்பூண்டு நீதிமன்றத்தை நாட ஆர்.டி.ஓ., அறிவுரை
ADDED : ஜூலை 16, 2024 04:55 AM

கொடைக்கானல் ; ''மலைப்பகுதியில் மலைப் பூண்டுகளை சேதப்படுத்தும் காட்டு பன்றிகள் குறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுங்கள்'' என ஆர்.டி.ஓ., சிவராம் கூறினார்.
கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர்க் கூட்டம் ஆர்.டி.ஓ., சிவராம் தலைமையில் நடந்தது. தாசில்தார் கார்த்திகேயன், உதவி வன பாதுகாவலர் சக்திவேல், கால்நடை உதவி இயக்குனர் பிரபு, போக்குவரத்து கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன், மின்வாரிய செயற்பொறியாளர் மேத்யூ கலந்து கொண்டனர்.விவசாயிகள் விவாதம்:
அன்புநாதன், கூக்கால்: சாகுபடி காய்கறி பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்வது அதிகரித்துள்ளது.
உதவி வன பாதுகாவலர்: காட்டுப்பன்றிகளை சுட்டுத் தள்ளுவதற்கான மசோதா வந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
அசோகன், பேத்துப்பாறை: மலைப்பகுதியில் யானை வழித்தடங்களை விவசாயிகளை கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வழித்தடங்களை அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
உதவி வனப் பாதுகாவலர்: யானை வழித்தடம் குறித்த ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் அதை இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம்.
கிருபாகரன், கவுஞ்சி: மலைப்பகுதி நீர் ஆதாரங்கள் வனப்பகுதியில் இருப்பதால் அதை பராமரிப்பதில் நடைமுறை சிக்கல் உள்ளது.
உதவி வன பாதுகாவலர்: பராமரிப்பு குறித்து வனத்துறையை அணுகும் பட்சத்தில் ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
அசோகன், பேத்துப்பாறை: பேத்துப்பாறை பகுதியில் நள்ளிரவில் யானை நடமாட்டம் குறித்து டி.எப்.ஓ.,வை அலைபேசியில் அழைத்த போது அவர் ஒருமையில் திட்டினார்.
ஆர்.டி.ஓ.,: புகார் அளிக்கப்படும் பட்சத்தில் கலெக்டர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
கிருபாகரன், கவுஞ்சி: மன்னவனுார் வயல்வெளி பாதை சர்வே குறித்து சான்று அளிக்க வேண்டும்.
தாசில்தார் : நடவடிக்கை எடுக்கப்படும்.
தனமுருகன், மன்னவனுார்: விவசாய நிலங்களில் குரங்கு, கரடிகள் அட்டகாசம் செய்வதால் விவசாயிகள் உயிர் பாயத்துடன் அவதிப்படுகிறோம்.
உதவி வன பாதுகாவலர் : குரங்கு, கரடிகளை பிடிக்க கூண்டு அமைக்கப்படும்.
கண்ணதாசன், கூக்கால்: கிளா வரை போலுார் பகுதிகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளதை கொடைக்கானல் வன கோட்டத்திற்கு மாற்ற வேண்டும்.
உதவி வன பாதுகாவலர் : ஆனைமலை புலிகள் காப்பக அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்.
தன முருகன், மன்னவனுார்: மலைப் பூண்டுகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்துவதால் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளோம். வனத்துறையிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
ஆர்.டி.ஓ.: சட்டத்தை மதித்து நடந்து வருகிறோம். அதையும் மீறி நடக்கும் பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை நாடுங்கள்.
லட்சுமணன், கும்பூர்வயல்: கும்பூர் வயல் பேத்துப்பாறை இடையே ரோடு வசதி இல்லாத குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.
ஆர்.டி.ஓ.: நடவடிக்கை எடுக்கப்படும்.
கருப்பையா, பெருமாள் மலை: பேரிக்காய், பிளம்ஸ் விளைச்சல் பாதிப்பு குறித்து தோட்டக்கலைத்துறை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.
சித்தார்தன்,தோட்டக்கலை உதவிய இயக்குனர்: ஆய்வு செய்து வருகிறோம்.
கோபால்சாமி, காமனுார்: காமனுார் பகுதியில் மயானம் சீரமைக்கப்படாமல் உள்ளது. கொடலங்காடு காமனுார் ரோடு சேதமடைந்துள்ளது.
ஆர்.டி.ஓ.,: ஒன்றிய கட்டுப்பாட்டில் வரும் இந்த ரோடு குறித்து அறிவுறுத்தப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.