/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஓட ஓட விரட்டி கொலை
/
திண்டுக்கல்லில் ஓட ஓட விரட்டி கொலை
ADDED : மார் 25, 2024 07:02 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளி ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மதுரை ரோடு சி.கே.சி.எம்.காலனியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வீராகவுதம்27. நேற்று மதியம் தன் வீட்டு அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த கும்பல் வீராகவுதமிடம் தகராறில் ஈடுபட்டது. தகராறு முற்றியநிலையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தலை,கை,கால் உள்ளிட்ட இடங்களில் வெட்டிவிட்டு தப்பியது. திண்டுக்கல் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார்.
போலீசார் விசாரணையில் வீராகவுதம் மீது கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா எனவும் விசாரிக்கின்றனர்.

