ADDED : ஆக 20, 2024 01:00 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பரப்பலாறு அணை நீர்மட்டம் 2 அடி அதிகரித்து 67 அடியாக உள்ளது.
ஒட்டன்சத்திரம் சுற்றிய கிராமப் பகுதிகளில் மாலை வேளையில் பலத்த மழை பெய்கிறது. மலைப்பகுதிகளிலும் மழை பெய்கிறது.
பரப்பலாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் 65 அடியில் இருந்து 67 அடியாக (90 அடி) உயர்ந்துள்ளது.
அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டால் இதன் கீழ் உள்ள விருப்பாச்சி பெருமாள்குளம், முத்துசமுத்திரம், முத்து பூபாள சமுத்திரம், தங்கச்சியம்மாபட்டி சடையன்குளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம், காவேரியம்மாபட்டியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து ஏற்படும்.
இதன்மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலங்களுக்கு பாசன வசதி கிடைப்பதுடன் பல ஊராட்சிகளில் குடிநீர் பிரச்னையும் தீர்க்க வழி பிறக்கும்.

