ADDED : பிப் 26, 2025 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி: சேடப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக சாரணர் சிந்தனை தின விழா நடந்தது.
மாவட்ட சாரணர் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு ஆணையர் வைரமணி, பேரூராட்சி கவுன்சிலர் சாந்தி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார். சாரணர் இயக்கம் பேட்டன் பவுலின் உருவப் படத்திற்கு மலர்துாவி மரியாதை செலுத்தினர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அழகேஸ்வரி முனிப்ரியா பேசினர். குழு தலைவர் சவுதாமணி நன்றி கூறினார்.

