/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலையை பாருங்க சார்: உள்ளாட்சிகளில் சுத்திகரிப்பின்றி குடிநீர் சப்ளை
/
வேலையை பாருங்க சார்: உள்ளாட்சிகளில் சுத்திகரிப்பின்றி குடிநீர் சப்ளை
வேலையை பாருங்க சார்: உள்ளாட்சிகளில் சுத்திகரிப்பின்றி குடிநீர் சப்ளை
வேலையை பாருங்க சார்: உள்ளாட்சிகளில் சுத்திகரிப்பின்றி குடிநீர் சப்ளை
ADDED : மே 24, 2024 03:38 AM

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் துவக்கத்தில் பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு ஆறு, குளம். கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டன. முறையாக சப்ளை செய்வதற்காக அந்தந்த பகுதிகளில் மேல்நிலைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டன.
இதை கண்காணிக்க ஆப்பரேட்டர்கள் நியமித்து மாதந்தோறும் குடிநீர் தொட்டிகள் துாய்மை செய்ததற்கு பின்னே சப்ளை செய்யப்படுவது வாடிக்கையாக இருந்தது. தற்போது இந்நடைமுறை ஒரு சில பகுதிகளில் மட்டும் கடைபிடிக்க பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் கடைபிடிக்கப்படாமல் வெறுமனே நீர் நிலையிலிருந்து வரும் தண்ணீரை பொதுமக்களுக்கு சுத்திகரிப்பின்றி சப்ளை செய்கின்றனர்.
மழைக்காலங்களில் நீர்நிலையில் உள்ள தண்ணீரில் கிருமி, பூச்சி, கலங்கல் குடிநீர் என நேரடியாக சப்ளையாவதால் நோய் பரவல் ஏற்பட பொதுமக்கள் பாதிக்கின்றனர். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இதுகுறித்து புகார் தெரிவித்த போதும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
மாறாக சுத்திகரிப்பின்றி குடிநீர் சப்ளை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர்.
துவக்கத்தில் நீர் நிலைகளில் இருந்து வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குளோரின் கலப்பிற்கு பின் குடிநீர் சப்ளை செய்தது போன்று தற்போதும் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.