ADDED : ஆக 31, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிர் கலைக்கல்லுாரி விலங்கியல் துறை,மாவட்ட பொது சுகாதாரம்,நோய் தடுப்பு மருந்து துறையும் இணைந்து டெங்கு,தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் சமூகர் பங்களிப்பு எனும் தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி முதல்வர் இல ரேவதி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் சத்தியபாமா வரவேற்றார்.
மண்டல பூச்சியியல் ஆராய்ச்சியாளர் சான்விக்டர்,மாவட்ட பூச்சியியல் நிபுணர் தெய்வேந்திரன்,மாவட்ட நோய் தடுப்பியல் நிபுணர் நிஷா மோனிகா,வட்டா மருத்துவ அதிகாரி ஸ்ரீநிவாசன் பேசினர். விலங்கியல் துறை பேராசிரியர்கள் வகிதா,செந்தில் இளங்கோ ஏற்பாடுகளை செய்தனர்.