/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெயிலால் பாதித்தவர்களுக்கு தனிவார்டு
/
வெயிலால் பாதித்தவர்களுக்கு தனிவார்டு
ADDED : மே 04, 2024 06:32 AM
திண்டுக்கல்: வெயிலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துமவமனைக்கு வருவோருக்கு கூடுதல் படுக்கை வசதியுடன் தனிவார்டு அமைத்து சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவசர காரியங்களுக்காக மட்டும் வெளியில் வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் ,அரசியல் கட்சிகள் சார்பில் கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைத்துள்ளனர். வெயிலால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை பிரிவு அருகில் 10 படுக்கைகளுடன் தனி வார்டு , குழந்தைகளுக்கு குழந்தைகள் வார்டில் 5 படுக்கை ,மருத்துமவனை வளாகத்தில் 3 இடங்களில் ஓ.ஆர்.எஸ்.கரைசல் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.