/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோட்டில் ஓடுது கழிவு நீர்...பட்டா இருந்தும் நோ யூஸ் கொடைக்கானல் 12 வது வார்டில் தொடரும் அவலம்
/
ரோட்டில் ஓடுது கழிவு நீர்...பட்டா இருந்தும் நோ யூஸ் கொடைக்கானல் 12 வது வார்டில் தொடரும் அவலம்
ரோட்டில் ஓடுது கழிவு நீர்...பட்டா இருந்தும் நோ யூஸ் கொடைக்கானல் 12 வது வார்டில் தொடரும் அவலம்
ரோட்டில் ஓடுது கழிவு நீர்...பட்டா இருந்தும் நோ யூஸ் கொடைக்கானல் 12 வது வார்டில் தொடரும் அவலம்
ADDED : செப் 06, 2024 05:26 AM

கொடைக்கானல்; பராமரிப்பற்ற கழிப்பறையால் சுகாதாரக்கேடு, தாழ்வாக செல்லும் மின் கம்பத்தால் விபத்து அபாயம், ரோட்டில் ஓடும் கழிவு நீரால் சுகாதாரக்கேடு, சரிவர எரியாத தெருவிளக்கு, பட்டா கொடுத்தும் அடங்கலில் ஏறாத அவலம், தெருநாய்கள் தொல்லை, அடிக்கடி மின்தடை, மேல்நிலைத் தொட்டி குறுக்கு தெருவில் அரைகுறையாக விடப்பட்ட பேவர் பிளாக் ரோடு பணி, குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வதை செய்வதால் அலறல் சப்தத்தால் இடையூறு, பட்டா இருந்தும் அடங்கலில் ஏறாத நிலை, ரேஷன் பொருட்கள் சரிவர சப்ளை செய்யாமல் இருப்பு இல்லை என கூறும் அவலம் என தினமும் ஏராளமான பிரச்னைகளை சந்திக்கின்றனர் கொடைக்கானல் நகராட்சி 12 வது வார்டு மக்கள்.
தாழ்வாக செல்லும் மின் ஒயர்
சலீம்ராஜா, வியாபாரம்: கழிப்பறைகள் பராமரிப்பற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது. திறந்தவெளியில் குப்பை குவிக்கப்படுவதை தவிர்க்க கட்டுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வீடுகளை ஒட்டி தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை மாற்றி அமைக்க வேண்டும். தெருவிளக்குகள் சரிவர எரியாத நிலையில் உள்ளது. சாக்கடை அடைப்புகள் சரி செய்யாமல் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது.
மின்கம்பத்தால் விபத்து
கார்த்தி, டெய்லர்: வார்டில் சாக்கடை கட்டமைப்பு இல்லாத நிலையில் கழிவு நீர் ரோட்டில் செல்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த மின்கம்பத்தால் விபத்து அபாயம் உள்ளது. குப்பை அகற்றுவதில் மெத்தன நிலை உள்ளது. காட்டுமாடு நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சத்துடன் வசிக்கின்றனர்.
இடியும் நிலையில் தடுப்பு சுவர்
பிச்சை, வியாபாரி : தபால் நிலையம் அலுவலக பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளின் கழிவுகள் அண்ணாசாலை ஒரு வழி தாழ்வான ரோட்டில் செல்வதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. பிலிஸ்விலா 2 வது தெருவில் வாய்க்கால் சேதம் அடைந்துள்ளதை சீரமைக்க வேண்டும். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அவதிப்படும் நிலை உள்ளது. அண்ணாசாலை ஒரு வழிப்பாதை உள்ள தாழ்வான ரோட்டில் மழை நீர் செல்வதால் தடுப்பு சுவர் இடியும் அபாயத்தில் உள்ளது.
ரூ.50 லட்சத்தில் பணிகள்
யாஷ்மின், கவுன்சிலர், (தி.மு.க., ) : ரூ.50 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் நடந்துள்ளது.
பராமரிப்பட்ட சுகாதார வளாகங்கள் சீர் செய்யப்படும். தாழ்வாகச் செல்லும் மின் ஒயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் புதிய சோடியம் விளக்குகள் அமைக்கப்படும். சேதமடைந்த மேல்நிலைத் தொட்டி சீரமைக்கப்படும். மின்தடை,தெருவிளக்கு பிரச்னை சரி செய்ய கூடுதலாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படும். மாடு வதை கூடம் புதிதாக அமைக்கப்படும் என்றார்.